Rock Fort Times
Online News

சிவகங்கை அருகே பெண் போலீஸ் தூக்கு போட்டு தற்கொலை…!

சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் மறவமங்கலத்தை சேர்ந்தவர் அஞ்சலி. இவர் கோவை மாவட்ட ஆயுதப்படையில் போலீசாக பணி புரிந்தார். இவரது கணவர் செல்வகுமார். ஆசிரியர். இந்த தம்பதிக்கு திருமணம் முடிந்து 9 ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை. இந்நிலையில், சொந்த ஊருக்கு சென்ற அஞ்சலி, அங்கு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அஞ்சலியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குழந்தை இல்லாத ஏக்கத்தில் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்