Rock Fort Times
Online News

பெண் போலீசார் குறித்த சர்ச்சை பேச்சு ; பெலிக்ஸ் ஜெரால்டுக்கு மே 31 வரை நீதிமன்ற காவல்…

ரெட் பிக்ஸ் யூடியூப் சேனல் எடிட்டர் பெலிக்ஸ் ஜெரால்ட் கடந்த சில நாட்களுக்கு முன்பு சவுக்கு சங்கரை பேட்டி எடுத்து தனது யூடியூப் சேனலில் வெளியிட்டார்.அதில் சவுக்கு சங்கர் பெண் காவலர்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவு செய்த நிலையில், அது தமிழகம் முழுக்க பரபரப்பை கிளப்பியது. இந்த நிலையில் பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசியதாக கோவை சைபர் கிரைம் போலீசார் சவுக்கு சங்கர் மற்றும் பெலிக்ஸ் ஜெரால்டு மீது வழக்கு பதிவு செய்திருந்தனர். இதேபோல தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் சவுக்கு சங்கர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. சவுக்கு சங்கர் தற்போது திருச்சி லால்குடி சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், திருச்சி சிறையில் இருந்த யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்ட் பெண் காவலர்கள் பாதுகாப்புடன் இன்று கோவை குற்றவியல் 5 வது நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி வி.எல் சந்தோஷ் முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து நீதிபதி வி.எல் சந்தோஷ், பெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் கோவை மத்திய சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்தார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்