Rock Fort Times
Online News

பிளஸ்-1 பொதுத்தேர்வில் தமிழில் 8 மாணவ- மாணவிகள் “சதம்”…!

தமிழ்நாட்டில் பிளஸ்-1 பொதுத் தேர்வு முடிவுகள் இன்று(14-05-2024) வெளியிடப்பட்டது. மொத்தம் 8 லட்சத்து 11 ஆயிரத்து 172 மாணவ- மாணவிகள் தேர்வு எழுதி இருந்தனர். இவர்களில் 7 லட்சத்து 39 ஆயிரத்து 539 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவிகிதம் 91.17 ஆகும். அவர்களில் பாடவாரியாக நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றவர்கள் எண்ணிக்கை வருமாறு:-

தமிழ்- 8

ஆங்கிலம்- 13

இயற்பியல்- 696

வேதியியல்- 493

உயிரியல்- 171

கணிதம்- 779

தாவரவியல்- 2

விலங்கியல்- 29

கணினி அறிவியல் 3,432

வணிகவியல்- 620

கணக்குப் பதிவியல்- 415

பொருளியல் -741

கணினிப் பயன்பாடுகள்- 288

வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல்- 293

தேர்வெழுதிய மாற்றுத் திறனாளி மாணாக்கர்களின் எண்ணிக்கை 8,221. தேர்ச்சி பெற்றோர் எண்ணிக்கை 7,504 (91.27%). தேர்வெழுதிய சிறைவாசிகளின் மொத்த எண்ணிக்கை 187 தேர்ச்சி பெற்றோர் 170 (90.90%).

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்