சார்ஜாவிலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஒன்று திருச்சி விமான நிலையத்தை வந்தடைந்தது. அதில் வந்த பயணிகள் மற்றும் அவர்களது உடைமைகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது ஒரு பயணி டைல்ஸ் வெட்டும் மிஷின் கொண்டு வந்திருந்தார். அந்த மெஷின் மீது சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அதனை பிரித்துப் பார்த்தனர். அப்போது அந்த கட்டிங் மிஷினின் உள்ளே 1.3 கிலோ எடையுள்ள தங்கத்தை மறைத்து கடத்தி வந்தது கண்டறியப்பட்டது. அந்த தங்கத்தின் இந்திய மதிப்பு ரூ.92 லட்சம் இருக்கும் என அதிகாரி ஒருவர் மதிப்பிட்டார். அந்த தங்கத்தை அவரிடம் கொடுத்து அனுப்பியது யார்?, யாரிடம் கொடுக்கச் சொன்னார்கள்? என்பது குறித்து அந்த பயணியிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது

Comments are closed.