Rock Fort Times
Online News

திருச்சி மண்ணச்சநல்லூர் அருகே அடுத்தடுத்த 2 வீடுகளில் நகை, பணம் திருட்டு…!

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள கேபிஜி நகரை சேர்ந்தவர் சரவணன் (35). இவர் துறையூரில் ஐஸ்கிரீம் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு வந்திருந்தார். அவருடைய மனைவி தாய் வீட்டிற்கு சென்றிருந்தார். மறுநாள் காலை சரவணன் கடைக்கு சென்று இருந்த நேரத்தில் பூட்டப்பட்டிருந்த அவரது வீட்டின் பூட்டுகளை உடைத்து உள்ளே சென்ற மர்ம ஆசாமிகள் பீரோவையும் உடைத்து அதிலிருந்த நகை, பணத்தை திருடினர்.
இதேபோல, பக்கத்து வீட்டில் வசிக்கும் அங்கப்பன் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் அங்கிருந்த நகை, பணத்தையும் திருடிக் கொண்டு தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்த புகார்களின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்