Rock Fort Times
Online News

இ-பாஸ் பெறுவது குறித்து சுற்றுலா பயணிகள் அச்சப்பட தேவையில்லை- தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா…!

இ-பாஸ் குறித்து சுற்றுலாப் பயணிகள் அச்சம் கொள்ள வேண்டாம் என்று தமிழக அரசின் தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார். உதகையில் மலர்க் கண்காட்சி மற்றும் ரோஜாக் கண்காட்சியை தொடங்கி வைத்த தலைமைச் செயலர் ஷிவ்தாஸ் மீனா பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், உதகை மலர்க் கண்காட்சியை 3 லட்சம் சுற்றுலாப் பயணிகள் பார்வையிட வருவார்கள் என்று எதிர்பார்கிறோம். இ-பாஸ் குறித்து சுற்றுலாப் பயணிகள் அச்சம் கொள்ளத் தேவையில்லை. அதை பெறுவது மிகவும் சுலபம். எந்த அலுவலகத்துக்கும் செல்ல வேண்டியதில்லை. செல்போனில் எந்த தேதியில், எத்தனை பேர் என்று தகவல் கொடுத்தால் 5நிமிடத்தில் இ-பாஸ் கிடைத்து விடும். யாரிடமும் ஒப்புதல் பெற வேண்டியதில்லை. சுற்றுலாப் பயணிகள் வீட்டிலிருந்து கிளம்பி மேட்டுப்பாளையம் வந்துகூட பதிவு செய்து, இ-பாஸ் பெறலாம். உயர் நீதிமன்ற உத்தரவு படி, ஒரு கணக்கெடுப்புக்காகத் தான் இ-பாஸ் வழங்கப்படுகிறது. இதனால், எந்த பாதிப்பும் இல்லை. பூங்காவில் நுழைவுக் கட்டணம் 3 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள். பூங்காவை நல்ல முறையில் பராமரிக்க வேண்டும், சேதம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகத் தான் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. எனினும், மக்களின் கோரிக்கையைக் கருத்தில்கொண்டு உரிய முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்