Rock Fort Times
Online News

திருச்சியில் அழுகிய நிலையில் பிணமாக கிடந்த எலக்ட்ரீசியன் !

திருச்சி இ.பி ரோடு ஜான்தோப்பு பாரதியார் தெருவை சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 55). இவர் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு வெக்காளிஸ்வரி (46) என்பவருடன் திருமணமாகி ஒரு மகன் உள்ளார். இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு குடும்ப பிரச்சனை காரணமாக தனது மனைவியை விட்டு பிரிந்து, திருச்சி வடக்கு ஆண்டாள் தெருவில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று சந்திரசேகர் வீட்டின் உரிமையாளர் சுமதி என்பவர் வெக்காளிஸ்வரியை தொடர்பு கொண்டு சந்திரசேகரின் அறை உள்பக்கமாக பூட்டிருக்கிறது. மேலும் அதில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது என தெரிவித்துள்ளார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற அவரது உறவினர்கள், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது சந்திரசேகர் உடல் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கோட்டை போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்