Rock Fort Times
Online News

எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் மாநில அளவில் 5ம் இடம் பிடித்தது திருச்சி !

தமிழக முழுவதும் இன்று பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது. திருச்சி மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் குறித்து திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கிருஷ்ண பிரியா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் திருச்சி மாவட்டத்தில் 16 ஆயிரத்து 648 மாணவர்களும்,16 ஆயிரத்து 528 மாணவிகளும் ஆக மொத்தம் 33 ஆயிரத்து 176 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினார்.
இதில் 15 ஆயிரத்து 500 மாணவர்களும், 16 ஆயிரத்து 94 மாணவிகளும் ஆக மொத்த 31 ஆயிரத்து 594 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தத்தில் 95. 23 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாநில அளவில் திருச்சி மாவட்டம் 91.55 சதவீதம் தேர்ச்சி பெற்று. தர வரிசை பட்டியலில் திருச்சி மாவட்டம் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது. அரசு பள்ளி மாணவர்கள் 87.90 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். சென்ற ஆண்டு 8ம்இடத்தில் இருந்த திருச்சி மாவட்டம் இந்த ஆண்டு மாநில அளவில் 5ம் இடத்தை பிடித்துள்ளது. மாவட்ட அளவில் தமிழ் பாடத்தில் 98.59 சதவீதமும், ஆங்கில பாடப்பிரிவில் 99.44 சதவீதமும் கணித பாடப்பிரிவில் 98.39 சதவீதமும் அறிவியல் பாடப் பிரிவில் 98.17 சதவீதமும் சமூக அறிவியல் பாடப் பிரிவில் 97.63 சதவீதம் மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.100சதவீதம் தேர்ச்சியில் 55 அரசு பள்ளிகள், 10 ஆதிதிராவிட நலப் பள்ளிகள், 1 பழங்குடியினர் நலப்பள்ளி, 8 அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள் , 12 பகுதி நிதி உதவி பெறும் பள்ளிகள் , 1 ஆங்கிலோ, இந்தியன் பள்ளி, 73 சுயநிதி மற்றும் மெட்ரிக் பள்ளிகள் என மொத்தம் 446 பள்ளிகளில் 160 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்