திருச்சி அருகே துயர சம்பவம்: ஆற்றில் குளித்துக் கொண்டு இருந்த சிறுவன் உள்பட 2 பேர் நீரில் மூழ்கி பலி…!
திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள தண்டாங்கோரை கிராமம் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ரத்தினம். இவரது மகன்கள் தங்கவேல் (32), மோகன் (29). இவர்கள் வசிக்கும் கிராமத்திற்கு அருகே கொள்ளிடம் ஆறு உள்ளது. இந்த ஆற்றில் அரசு மணல் குவாரி செயல்பட்டு வந்ததால் கொள்ளிடம் ஆற்றில் பல்வேறு இடங்களில் ஆழம் நிறைந்த பள்ளங்களில் நீர் தேங்கியுள்ளது. இந்நிலையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் தங்கவேல் தனது மகன் 8 வயதான ரிதன், தனது சித்தப்பா மோகனை அழைத்துக் கொண்டு தண்டாங்கோரை கிராமத்துக்கு அருகே உள்ள கொள்ளிடம் ஆற்றில் குளிக்கச் சென்றார். அப்போது ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்ற ரிதன் தண்ணீரில் மூழ்கியதை பார்த்த மோகன் பதற்றமடைந்து தனது அண்ணன் மகனை காப்பாற்ற முயன்ற போது மோகனும், தண்ணீரில் மூழ்கி னார்.இதுகுறித்து தகவலறிந்த லால்குடி தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆற்றில் மூழ்கிய மோகன் மற்றும் ரிதன் ஆகிய இருவரையும் மீட்டனர். ஆனால், அவர்கள் உயிரிழந்து விட்டனர். இதுகுறித்து லால்குடி போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர். குளிக்க சென்ற இடத்தில் ஆற்றில் மூழ்கி சிறுவன் உள்பட 2 பேர் உயிரிழந்த சம்பவத்தால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியது.

Comments are closed.