Rock Fort Times
Online News

திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் திருப்பணிக்காக பாலாலயம்…!

திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் உள்ள மூன்றாம் பிரகாரத்தில் எட்டு திசைகளில் உள்ள கொடி மரங்களையும் மற்றும் சுவாமி சன்னதியில் உள்ள கொடி மரத்தையும் புதிதாக நிர்மாணிப்பதற்கென பாலாலய பூஜை நடந்தது.

முன்னதாக விக்னேஷ்வர பூஜையுடன் யாகசாலை பூஜை தொடங்கியது. தொடர்ந்து இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பட்டன. பின்னர் பாலாலயத்திற்காக உள்ள சித்திர பிம்பங்களுக்கு மகாகும்பாபிஷேகம் நடந்தது.

இந்த அஷ்டதிக்கு கொடி மரங்கள் மற்றும் சுவாமி சன்னதி பிரதான கொடி மரம் ஆகியவை சுமார் ஒரு ரூ. 1கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட உள்ளன. இந்தப் பணிகள் ஓராண்டுக்குள் நிறைவுபெறும் என்று கோவில் உதவி ஆணையர் ரவிச்சந்திரன் தெரிவித்தார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்