Rock Fort Times
Online News

திருச்சியில் வெயில் கொடுமைக்கு எலக்ட்ரீசியன் பலி…!

வழக்கத்தை விட இந்த ஆண்டு கோடை வெயில் அதிகரித்து வருகிறது. இன்று(04-05-2024) முதல் அக்னி நட்சத்திரம் ஆரம்பம் ஆகிறது. இதனால் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும். திருச்சியில் கடந்த சில நாட்களாக 108 டிகிரி வரை வெயில் கொளுத்தி வருகிறது. இதனால், வேலைக்கு செல்லும் தினக்கூலிதொழிலாளர்கள், வாகன ஓட்டுனர்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் திருச்சியில் வெயில் கொடுமைக்கு எலக்ட்ரீசியன் ஒருவர் பலியாகி உள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

இதுகுறித்து போலீசார் தரப்பில் கூறப்படுவதாவது:- திருச்சி புத்தூர் எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 48). எலக்ட்ரீஷியன். இவர், தனது இரு சக்கர வாகனத்தில் புத்தூர் நால்ரோடு அருகில் மதியம் 12.45 மணி அளவில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென்று மயக்கம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து இரு சக்கர வாகனத்தை ஓரமாக நிறுத்தி விட்டு சிறிது நேரம் அமர்ந்தார். அப்போது அவர் கீழே சரிந்தார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ்யை வரவழைத்து ஜெயக்குமாரரை திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த ஜெயக்குமார் சிகிச்சை பலனின்றி இறந்தார். வெயில் கொடுமைக்கு அவர் இறந்திருக்கலாம் என்று தெரிகிறது. இவ்வாறு போலீசார் தரப்பில் கூறப்பட்டது. மேலும், இதுகுறித்து உறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்