Rock Fort Times
Online News

போலீசார் குறித்து அவதூறு பேச்சு: சவுக்கு சங்கரை கைது செய்து அழைத்து வரப்பட்ட , வாகனம் விபத்தில் சிக்கியது-3 பேர் படுகாயம்…!

அரசியல் மற்றும் பொது பிரச்சனைகள் குறித்து சமூக வலைத்தளங்களில் துணிச்சலாக தனது கருத்துக்களை பதிவிட்டு வருபவர் சவுக்கு சங்கர். இவர் காவல்துறை அதிகாரிகள் குறித்தும், பெண் காவலர்கள் குறித்தும் அவதூறான கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார். இதுதொடர்பாக சவுக்கு சங்கரை தேனியில் வைத்து கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் கைது செய்து கோவைக்கு போலீஸ் வாகனத்தில் அழைத்து வந்து கொண்டிருந்தனர்.

 

தாராபுரம் ஐடிஐ கார்னர் பகுதியில் போலீஸ் வாகனம் வந்தபோது எதிரே வந்த வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சவுக்கு சங்கர் உட்பட மூன்று பேர் படுகாயமடைந்தனர். இதனையடுத்து 3 பேரும் மீட்கப்பட்டு தாராபுரம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது தாராபுரத்தில் உள்ள வேலு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆனால், விபத்தில் சவுக்கர் சங்கர் படுகாயமடைந்ததாக கூறப்படும் தகவலை போலீசார் மறுத்துள்ளனர். சவுக்கு சங்கரை அழைத்து சென்ற வாகனம் விபத்தில் சிக்கியது உண்மைதான். ஆனால் சவுக்கு சங்கருக்கு காயங்கள் ஏதும் ஏற்படவில்லை.

அவரை அழைத்து வந்த போலீசாருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளது. காவலர்கள் மட்டும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சவுக்கு சங்கர் வேறோரு வாகனத்தில் கோவை அழைத்து செல்லப்பட்டதாக கூறினர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்