புதுடெல்லி மகளிர் ஆணையத்தில் 223 ஊழியர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.இந்த நடவடிக்கை ஆளுநர் சக்சேனாவின் உத்தரவின்படி எடுக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி மகளிர் ஆணையத்தில் விதிகளை மீறி ஊழியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பாக விசாரணை நடந்து வந்தது. இதனை எடுத்து மகளிர் ஆணையத்தில் பணிபுரிந்த வந்த 223 ஊழியர்களை பணிநீக்கம் செய்யுமாறு டில்லி ஆளுநர் சக்சேனா அதிரடி உத்தரவு பிறப்பித்தார். மகளிர் ஆணையத்தின் தலைவி ஸ்வாதி மாலிவால், விதிகளுக்கு மாறாக அனுமதியின்றி ஊழியர்களை நியமித்ததாக கூறப்படுகிறது.
இந்த புகார் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Comments are closed.