Rock Fort Times
Online News

மே தினத்தை முன்னிட்டு அண்ணா தொழிற்சங்கம் சார்பில் திருச்சியில் கொடியேற்று விழா…!

மே தினத்தை முன்னிட்டு திருச்சி மாநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் சார்பில் அதிமுக கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் ஜெ.சீனிவாசன் கலந்து கொண்டு அதிமுக கொடியை ஏற்றி வைத்து அனைவருக்கும் நீர்மோர் வழங்கினார்.

 

நிகழ்ச்சியில் அமைப்பு செயலாளர் ரத்தினவேல், ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் இன்ஜினியர் கார்த்திகேயன், ஜெயலலிதா பேரவை மாநில துணை செயலாளர் அரவிந்தன், எம்.ஜி.ஆர்.இளைஞர் அணி மாவட்ட செயலாளர் சிந்தாமணி முத்துக்குமார், நிர்வாகிகள் ஜாக்குலின், கலிலுல் ரஹ்மான், அன்பழகன், சுரேஷ் குப்தா, என்.எஸ்.பூபதி, ரோஜர், ஏர்போர்ட் விஜி , ராஜேந்திரன், கலைவாணன்,
இலியாஸ், வெங்கட்பிரபு. ஜெயக்குமார், பாலக்கரை ரவீந்திரன், சக்திவேல், வாழைக்காய் மண்டி சுரேஷ், நத்தர்ஷா, உடையான்பட்டி செல்வம், பிளாட்டோ,
தென்னூர் ஷாஜகான், சகாபுதீன், டி.ஆர்.சுரேஷ்குமார் உள்ளிட் பலர் கலந்து கொண்டனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்