கோவை மாவட்டம் சிறுமுகை ஜடையம்பாளையத்தைச் சேர்ந்தவர் முருகன். கொசு வலை வியாபாரியான இவர் மனைவி ரஞ்சிதா (30), மகன் அபிஷேக் (8) மற்றும் மகள் நித்திஷா (7) ஆகியோருடன் சம்பவத்தன்று இரவு கரூர் சென்றுவிட்டு மீண்டும் சிறுமுகை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார்.

அப்போதுபவானிசாகரில் இருந்து சத்தியமங்கலம் நோக்கி கல்லூரி மாணவர்கள் வந்த கார் ஒன்றுடன், நெசவாளர் காலனி என்ற இடத்தில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விபத்தில் சிக்கியவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும், உயிரிழந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed.