தமிழ்நாடு அரசு மாநகராட்சிகளில் பொறியாளர் மற்றும் செயற்பொறியாளர் அந்தஸ்தில் பணியாற்றி வரும் 6 பொறியாளர்களை கண்காணிப்பு பொறியாளராக தற்காலிக பதவி உயர்வு அளித்துள்ளது. தமிழ்நாடு அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா இந்த உத்தரவை வெளியிட்டுள்ளார். அந்த உத்தரவின் படி சேலத்தில் கூடுதல் பொறுப்பாக செயற்பொறியாளராக இருந்த ஜி.ரவி அதே மாநகராட்சியில் கண்காணிப்பு பொறியாளராக பதவி உயர்வு பெற்றுள்ளார். அதேபோன்று ஈரோட்டில் விஜயகுமார் ஈரோடு மாநகராட்சியிலும், திருநெல்வேலியில் எல்.கே பாஸ்கர் தூத்துக்குடி மாநகராட்சியிலும் ,மதுரை எஸ்.அரசு மதுரை மாநகராட்சி ,திருச்சி மாநகராட்சி செயற்பொறியாளர் எஸ்.குமரேசன் திருநெல்வேலி மாநகராட்சிக்கும், சேலம் முகமது சபியுல்லா ஆவடி மாநகராட்சிக்கும் தற்காலிக பதவி உயர்வு பெற்று கண்காணிப்பு பொறியாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதேபோன்று மதுரை அயல் பணியில் பணியாற்றி வந்த செயற்பொறியாளர் அன்பழகன் வேலூர் மாநகராட்சிக்கு காலியாக உள்ள கண்காணிப்பு பொறியாளர் பணியிடத்திற்கு பதவி உயர்வு பெற்றுள்ளார். திருச்சி மாநகராட்சி செயற்பொறியாளராக பணியாற்றி வந்த எஸ்.குமரேசன் திருநெல்வேலி மாநகராட்சியில் கண்காணிப்பு பொறியாளராக தற்காலிக பதவி உயர்வு பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

