Rock Fort Times
Online News

திருச்சி வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் 5 இடங்களில் கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு…!

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தேவி தியேட்டர், சோமரசம்பேட்டை, வியாழன் மேடு, அம்மாபேட்டை, ஆண்டவர் கோயில் ஆகிய 5 இடங்களில் கோடைகால நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டது. இதனை வடக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான மு.பரஞ்ஜோதி திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர் மோர், தர்பூசணி, சர்பத், ஜூஸ் வகைகள் ஆகியவற்றை வழங்கினார்.

இதில், மாநில அமைப்பு செயலாளர்கள் வளர்மதி, ஆர்.மனோகரன், திருச்சி பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கருப்பையா, எம். ஜி.ஆர். இளைஞரணி மாநில இணை செயலாளர் பொன்.செல்வராஜ், மாவட்ட சிறுபான்மை நலப்பிரிவு செயலாளர் புல்லட் ஜான், இலக்கிய அணி மாவட்ட செயலாளர் ஜெயம் ஸ்ரீதர், மீனவரணி மாவட்ட செயலாளர் பேரூர் கண்ணதாசன், ஒன்றிய செயலாளர்கள் முத்துக்கருப்பன், ஜெயக்குமார், கோப்பு நடராஜ், கடிகை ராஜகோபால், எம்ஜிஆர் இளைஞர் அணி மாவட்ட இணைச் செயலாளர் தேவா, ஒன்றிய கவுன்சிலர் புங்கனூர் கார்த்திக்,பொதுக்குழு உறுப்பினர் பிரியா சிவக்குமார், ஸ்ரீரங்கம் ரவிசங்கர், பகுதி செயலாளர்கள் டைமன்ட் திருப்பதி, சுந்தர்ராஜன் மற்றும் திருப்புகழ், ராஜு, வி.என்.ஆர். செல்வம், இ.பி. ஏகாம்பரம், படையப்பா ரெங்கராஜ், ஜெயந்தி, சுந்தர்பட்டர், டைலர் மோகன், சித்ரா, சம்பத் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்