திருச்சி தென்னூர் பாரதிநகர் லட்சுமி அம்மா ஸ்டோர் பகுதியைச் சேர்ந்த மனோகரன்- தீபா தம்பதியின் மகன் சாருகேஷ் (வயது 19). இவர், திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் பயோ இன்பர்மேஷன் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். அதோடு, ஒரு ஹோட்டலிலும் வேலை பார்த்து வந்தார். தனது நண்பர்கள் நல்ல வேலையில் இருப்பதால் தமக்கு நல்ல வேலை அமையவில்லையே என்று மன வருத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், சாருகேஷ் வீட்டில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து அவரின் தாய் தீபா கொடுத்த புகாரின் அடிப்படையில் தில்லை நகர் போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed.