Rock Fort Times
Online News

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் 30-ம் தேதி ஜல்லிக்கட்டு…!

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் முகூர்த்தகால் நடப்பட்டது

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் மெய்க்கண்ணுடையாள் அம்மன் கோவில் உள்ளது. இங்கு வருடம்தோரும் சித்திரை மாத திருவிழா விமரிசையாக நடைபெறும். திருவிழாவிற்கு முன்னதாக நடைபெறும் பூச்சொரிதல் அன்று ஜல்லிக்கட்டு நடத்தப்படும் . ஆனால், நாடாளுமன்ற தேர்தல் விதிமுறைகளின் காரணமாக ஜல்லிக்கட்டை நடத்த முடியவில்லை.

அதனால், ஜல்லிக்கட்டு போட்டியின்றி பூச்சொரிதழ் விழா மட்டும் நடைபெற்றது. தமிழகத்தில் தேர்தல் முடிவடைந்ததையடுத்து ஜல்லிக்கட்டு கமிட்டி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை பரிசீலனை செய்த நீதிமன்றம் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளித்தது.

அதனைத் தொடர்ந்து வருகிற 30-ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. அதற்கான முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி, அதிமுக முன்னாள் அமைச்சரும், விராலிமலை சட்டமன்ற உறுப்பினருமான விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்றது. இதில் விழா கமிட்டியினர், அனைத்து கட்சி பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர். பின்னர் ஜல்லிக்கட்டு போட்டிக்கான பேரிகார்டு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்