திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்கம் சார்பில் வழக்கறிஞர்களுக்கு அக்குபஞ்சர் சிகிச்சை முகாம் நடைபெற்றது. மாவட்ட நீதிபதி கே.பாபு, நீதிமன்ற நடுவர்கள் சிவக்குமார், பாலாஜி ஆகியோர் முகாமை துவக்கி வைத்தனர்.

இதில், மூத்த வழக்கறிஞர் தனிஸ்லால், வழக்கறிஞர் சங்கத் தலைவர் முல்லை சுரேஷ், அரசு வழக்கறிஞர் சவரிமுத்து மற்றும் மருத்துவர்கள் சரவணமுத்து, பிரவீன் மற்றும் 15 மருத்துவர் கொண்ட குழுவினர் கலந்து கொண்டனர். இம்முகாமில் 300- க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். இதற்கான ஏற்பாடுகளை குற்றவியல் வழக்கறிஞர் சங்கத் செயலாளர் பி.வி.வெங்கட் செய்திருந்தார்.


Comments are closed.