Rock Fort Times
Online News

கோடையை சமாளிக்க நீர்மோர் பந்தல் அமைத்து தாகம் தணிக்குது திருச்சி கே.எம்.எஸ் ஹக்கீம் குழுமம்…!

தமிழகத்தில்,அக்னி நட்சத்திரம் ஆரம்பிக்கும் முன்பே வெயில் உக்கிர தாண்டவம் காட்டி வருகிறது. இதனால் அன்றாட தேவைகளுக்கு கூட வெளியே செல்ல முடியாமல் மக்கள் பலர் அவதி அடைந்து வருகிறார்கள்.  வேலை சார்ந்த பல்வேறு பணிகளுக்காக வெயிலில் அலைந்து திரியும் மக்களின் தாகத்தை தணிப்பதற்காக, திருச்சி சுற்றுவட்டார பகுதிகளில் பிரியாணிக்கு பெயர்பெற்ற கே.எம்.எஸ் ஹக்கீம் குழுமம் தனது தில்லை நகர் சாஸ்திரி ரோடு கிளையில் தாகம் தணிக்க நீர் மோர் பந்தலை அமைத்து மக்களின் தாகம்  தணித்து வருகிறது. தொழில் செய்தோமா, லாபம் பார்த்தோமா என்கிற நோக்கோடு மட்டுமில்லாமல், மக்களின் கஷ்டம் அறிந்து இவர்கள் செய்துவரும் இந்த சேவை அனைவராலும் மனதார பாராட்டப்பட்டு வருகிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்