Rock Fort Times
Online News

திருச்சி மாநகராட்சி 43- வது வார்டில் சுகாதார சீர்கேடு- கண்டுகொள்ளாத அதிகாரிகள், போராட்டம் நடத்த பொதுமக்கள் முடிவு…!

திருச்சி மாநகராட்சி 43-வது வார்டுக்கு உட்பட்ட காட்டூர் காந்தி தெரு, நேரு தெரு, அண்ணா தெரு ஆகிய பகுதிகளில் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் உள்ளது. மேலும், கடந்த 6 மாதமாக அப்பகுதியில் உள்ள கழிவு நீர் கால்வாய்கள் சுத்தம் செய்யப்படாததால் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம்  வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக வைக்கப்பட்ட குடிநீர் தொட்டி குப்பை மேட்டில் கிடக்கிறது. மேலும், காவிரி குடிநீர் குழாய்கள் எங்குமே இல்லை. அனைத்தையும் இடித்து விட்டதால் போதிய குடிநீர் கிடைக்காமல் இப்பகுதி மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.  மேலும்,  கழிவறையில் செப்டிக் டேங்க் குழாய் பதிக்காமல் சிமெண்ட் சாலை அமைத்துள்ளனர்.  இது சம்பந்தமாக மாநகராட்சி ஆணையர், மேயர் ஆகியோரிடம் பலமுறை முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இனியும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் வீதியில் இறங்கி போராடுவதை தவிர வேறு வழியில்லை என்று தெரிவித்தனர்.

 

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்