Rock Fort Times
Online News

திருச்சி விமான நிலையத்தில் கத்தை, கத்தையாக ரூ.20 லட்சம் வெளிநாட்டு பணம் பறிமுதல்…!

திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து ஏர் ஏசியா விமானம் வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளின் உடைமைகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ஆண் பயணி ஒருவர் பையில் மறைத்து கத்தை, கத்தையாக வெளிநாடு மற்றும் உள்நாட்டு பணம் கொண்டு வந்தது தெரிய வந்தது.

அந்த பணத்தை கொண்டு வருவதற்கான ஆவணம் எதுவும் அவரிடம் இல்லாததால் அந்தப் பணம் முழுவதையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட வெளிநாட்டு பணத்தின் இந்திய மதிப்பு சுமார் 20 லட்சம் இருக்கும் என்று அதிகாரி ஒருவர் கூறினார்.அந்த பயணியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்