திருச்சி, ஸ்ரீரங்கம் பரதநாட்டியாலயா நிறுவனத்தை நடத்தி வருபவர் ரேவதி முத்துசுவாமி. இவரது கணவர் முத்துசாமி, திருச்சி தேசிய கல்லூரி முன்னாள் முதல்வர் ரேவதி முத்துசுவாமி 1973 ஆம் ஆண்டு இந்த பரதநாட்டியாலா பள்ளியை தொடங்கினார். இவர், உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் பரதநாட்டிய நிகழ்ச்சியை நடத்தியுள்ளார். இவர், கலைமாமணி விருது உட்பட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். இந்த நாட்டியாலயா பள்ளி 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதற்கான “கோல்டன் ஜூப்ளி” விழா வருகிற 27-04 2024 சனிக்கிழமை மாலை 4 மணியளவில் திருச்சி தேவர் ஹாலில் நடக்கிறது.

விழாவில் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக துணை வேந்தர் எம்.செல்வம், திருச்சி மாவட்ட முன்னாள் ஆட்சித் தலைவர் உஜாகர்சிங், தினமலர் பங்குதாரர் மற்றும் ஆசிரியர் ஆர். ராமசுப்பு, பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் கே.மீனா, டால்மியா சிமெண்ட் முன்னாள் இயக்குனர் என்.கோபால்சுவாமி, திருச்சி மிட் டவுன் ரோட்டரி கிளப் சாசனத்தலைவர் சின்னஅழகப்பன், தமிழிசை சங்கத் தலைவர் எல்.என்.லட்சுமணன், ரசிக ரஞ்சன சபா செயலாளர் என். சேகர், திருச்சி கலை காவிரி கல்லூரி முதல்வர் பி. நடராஜன், சுற்றுலாத்துறை ஓய்வு பெற்ற இணை இயக்குனர் கே.இளங்கோவன், கலை மற்றும் கலாச்சார துறை ஓய்வு பெற்ற இணை இயக்குனர் ஆர். குணசேகரன், ஸ்ரீரங்கம் கோவில் மிராசு அர்ச்சகர் சுந்தர் பட்டர் (எ) எஸ். சீனிவாச ராகவன், ராக்போர்ட் டைம்ஸ் முதன்மை செய்தி ஆசிரியர் எஸ்.ஆர். லெஷ்மி நாராயணன், தூர்தர்ஷன் கேந்திரா முன்னாள் இயக்குனர் சி. பி.விஜயலட்சுமி, ஸ்ரீரங்கம் பரதநாட்டியாலயா புரவலர் ராஜி வெங்கட்ராமன், அமெரிக்காவில் உள்ள பென்சில்வேனியா இஎன்டி சிறப்பு மருத்துவர் கீதா கிருஷ்ணன், ஓய்வு பெற்ற வங்கி மேலாளர் சங்கரன் கே.கிருஷ்ணகாந்தி , எல் அண்ட் டி ஓய்வு பெற்ற பொது மேலாளர் கே.எஸ்.நடராஜன் சாந்தா, மரகதம் சங்கரநாராயணன் தொண்டு நிறுவன டிரஸ்டி சாந்தி கிருஷ்ணன், தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளி நிபுணர் குழு உறுப்பினர் கே.எஸ்.கைலாசம் பத்மா, ஸ்ரீரங்கம் பரதநாட்டியாலயா புரவலர் டி.எஸ்.சுந்தரம், லட்சுமி சுந்தரம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொள்கிறார்கள்.


ஸ்ரீரங்கம் பரதநாட்டியாலயா முன்னாள் மாணவிகள் பிரேமாலயா நாட்டிய நிகேதன் இயக்குனர் கலைநண்மணி லதா அரவிந்தன், பிரியா ராம்குமார், ஆனந்தி கார்த்திகேயன், ஸ்ரீரங்கம் மயூரி நாட்டியாலயா குரு கலை சுடர்மணி பி.தேவிகா சுகந்தி பிரேம், ஜெயஸ்ரீ ரகுராம், ரெங்கநாயகி குமார், புவனா நந்தகுமார், தீபா ஹரிஷங்கர், உமா மகேஸ்வரி, ரேகா சந்திரமௌலி, ஸ்ரீ பிரியா ரங்கன், நீரஜா ஹரிஷ், சுஜாதா சரத், பிரசன்னா நரசிம்மன், கந்தா நாட்டியலயா இயக்குனர் ராஜேஸ்வரி ஸ்ரீதர், ரெங்கப்பிரியா கண்ணன், வைபவி ஆதித்யா, கோமதி வெங்கட், பெங்களூர் எம்.எஸ். நாட்டிய ஷேத்திரா குரு கௌசல்யா நிவாஸ், ஸ்ரீரங்கம் பரதநாட்டியாலயா ஆசிரியை கோதாஸ்ரீ முரளிதரன், ஆசிரியை கீர்த்தனா, ஹரிணி தேவா ஆகியோர் செய்து வருகின்றனர்.


Comments are closed.