ஆன்லைனில் ரூ.79 லட்சத்தை இழந்த ஓய்வுபெற்ற பாய்லர் ஆலை ஊழியர்- சைபர் கிரைம் போலீசார் விசாரணை…!
திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் சாலையை சேர்ந்தவர் சந்திரசேகரன் (வயது 74 ). ஓய்வு பெற்ற பாய்லர் ஆலை ஊழியர். சம்பவத்தன்று இவருடைய செல்போன் எண்ணில் தொடர்பு கொண்ட மர்ம ஆசாமி ஒருவர், ஆன்லைனில் ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று ஆசைவார்த்தை கூறியுள்ளார் . இதனை நம்பிய சந்திரசேகரன், அந்த மர்ம ஆசாமியின் செல்போன் எண்ணுக்கு ரூ.79 லட்சத்து 50 ஆயிரம் அனுப்பியுள்ளார்.

அதன்பிறகு அந்த அந்த எண்ணை தொடர்பு கொள்ள முடியவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சந்திரசேகரன் இந்த மோசடி குறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed.