Rock Fort Times
Online News

பாஜகவுக்கு எதிராக சமூக வலைதளங்களில் அவதூறு : திருச்சி மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு…

கடலூரில் பாஜகவுக்கு வாக்களித்த பெண் கொலை செய்யப்பட்டதாக சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியது குறித்து, திருச்சி சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இது குறித்து மாவட்ட காவல்துறை சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கடலூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீமுஷ்ணம் சிதம்பரம் மக்கவைத் தொகுதியில் அடங்கியுள்ளது. இத்தொகுதியில் பக்கிரிமணியம் கிராமத்தில் நடந்த தேர்தல் வாக்குப் பதிவின்போது, அதே பகுதியைச் சேர்ந்த கோமதி என்ற பெண் பாஜக வுக்கு வாக்களித்ததால், அவரை சிலர் கொலை செய்துவிட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. மேலும் அதில், இது குறித்து ஏன் எந்த ஊடகமும் செய்தி வெளியிடவில்லை, யாரும் இது குறித்து கேள்வி எழுப்பவில்லை எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இத்தகவலை சின்ஹா என்பவர் (மோடியின் குடும்பம் எனவும்) பகிர்ந்துள்ளார். ஆனால், இதுகுறித்த விசாரணையில், ஸ்ரீமுஷ்ணம் காவல் நிலையத்துக்கு உள்பட்ட பக்கிரிமணியம் பகுதியில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட முன்விரோதம் மற்றும் தகராறில் கோமதி என்பவர் தாக்கப்பட்டு, மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிந்து அவரது சாவுக்கு காரணமான நபர்களை கைது செய்துள்ளனர். இந்நிலையில் அமைதியை குலைத்து, இரு அரசியல் கட்சியினரிடையே மோதலை ஏற்படுத்தும் விதமாக தவறான தகவல்களை அவதூறாக பரப்பிவரும் நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார்கள் எழுந்தன. அந்த வகையில் திருச்சி மாவட்ட சைபர் கிரைம் போலீசார், இந்த அவதூறு தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்