Rock Fort Times
Online News

பொங்கல் பரிசு தொகுப்பு பெற நாளை முதல் டோக்கன் வினியோகம்…

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வரும் 15ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி குடும்ப அட்டைதாரர்களுக்கு பச்சரிசி, சர்க்கரை, முழுக்கரும்பு போன்ற பொருட்கள் அடங்கிய தொகுப்புடன் ரூ. 1,000 ரொக்கப்பரிசு வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன்படி,
2 கோடியே 19 லட்சத்து 57 ஆயிரத்து 402 ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இந்நிலையில், ரூ.1,000 ரொக்கப்பணத்துடன் பொங்கல் பரிசுத்தொகுப்பு பெறுவதற்கான டோக்கன் நாளை(7-1-2024) முதல் ரேஷன் கடைகளில் வினியோகம் செய்யப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. டோக்கன் வாங்கியவர்கள் அதில் குறிப்பிட்டுள்ள தேதி, கிழமையில் ரேஷன் கடைக்கு சென்று பொங்கல் பரிசுத்தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்