Rock Fort Times
Online News

திருமணமான வாலிபர் எடுத்த துயர முடிவு:திருநங்கை காதலியுடன் தூக்கிட்டு தற்கொலை…

செங்கல்பட்டை அடுத்த பழவேலியில் உள்ள இருளர் காலனியை சேர்ந்தவர் சின்னபையன். இவரது மகன் ராமு (24). இவருக்கு கடந்த ஒரு வருடத்திற்கு முன்புதான் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு முன்பே ராமுவும், அதே பகுதியை சேர்ந்த திருநங்கையான சரளா என்பவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. திருமணத்திற்கு பிறகும் அவர்கள் தொடர்ந்து பழகி வந்துள்ளனர். இதனை அறிந்த ராமுவின் மனைவி அவர்கள் இருவரையும் கண்டித்துள்ளார். ஆனால், அவர்கள் இருவரும் பிரிய மனமில்லாமல் தவித்தனர். இனி இந்த உலகத்தில் வாழ்வதை விட சாவதே மேல் என்ற முடிவுக்கு இருவரும் வந்தனர். அதன்படி, அவர்கள் இருவரும் பழவேலி பாலாற்றங்கரையில் ஒரு மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். இதுகுறித்து தகவலறிந்த செங்கல்பட்டு தாலுகா காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று இருவரது சடலத்தையும் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்