Rock Fort Times
Online News

திருச்சி தேசிய கல்லூரியில் உடற்கல்வி ஆசிரியர்களுக்கான பயிலரங்கம்…

திருச்சி தேசியக் கல்லூரியில் தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறையும், திருச்சி மாவட்ட கல்வி அலுவலகமும் இணைந்து நடத்திய உடற்கல்வித்துறை ஆசிரியர்களுக்கான ஒரு நாள் பயிலரங்கம் இன்று ( 20.12.2023 ) நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் கி.குமார் தலைமை தாங்கினார். திருச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர், உடலாலும், மனதாலும் உயர்ந்த பண்புடைய இளைய சமூகத்தை உருவாக்குவதில் உடற்கல்வித்துறை ஆசிரியர்களுக்கான பங்களிப்பு மிகவும் முக்கியமானது, மாணவர்களை நல்வழிப்படுத்தும் நல்லாசிரியர் பெருமக்கள்  உடற்கல்வி ஆசிரியர்கள் என்று பேசினார். இதில், திருச்சி மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் முனைவர் சரோஜினி முன்னிலை வகித்தார். தேசியக் கல்லூரியின் துணை முதல்வர் து.பிரசன்னபாலாஜி, உடற்கல்வித் துறையின் சமீபத்திய போக்குகள் குறித்தும், ஆங்கிலத் துறைத்தலைவர் கார்த்திகேயன் ஆய்வியல் நோக்கில் உடற்கல்வியியல் துறை சார்ந்த செய்திகள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தனர். இப்பயிலரங்கில், 450 க்கும் மேற்பட்ட உடற்கல்வியியல் துறை ஆசிரியர்கள் திரளாக பங்கேற்றனர்.

பஞ்சப்பூரில் ரூ.17.60 கோடி மதிப்பில் புதிய ஆம்னி பேருந்து நிலையம் அடிக்கல் நாட்டு விழா

1 of 917

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்