பாலத்தின் தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு கொள்ளிடம் ஆற்றில் பாய்ந்த கார்- கணவன்-மனைவி பலி.. (படங்கள்)
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் எர்ணாகுளத்தைச் சேர்ந்த ஸ்ரீநாத் என்பவர் தனது மனைவியுடன் இன்று அதிகாலை திருச்சி விமான நிலையத்தில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தார். ஸ்ரீரங்கம் – சமயபுரம் டோல்கேட்டை இணைக்கும் கொள்ளிடம் பாலத்தில் கார் வேகமாக சென்று கொண்டிருந்தபோது ஸ்ரீநாத்தின் கட்டுப்பாட்டை இழந்த கார், பாலத்தின் வலது பக்க தடுப்புச்சுவரை உடைத்துக் கொண்டு ஆற்றில் பாய்ந்தது. இதில் கார் அப்பளம் போல நொறுங்கியது. இதில், காரில் பயணித்த ஸ்ரீநாத் மற்றும் அவரது மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஸ்ரீரங்கம் போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்த உடல்களை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சேதம் அடைந்த காரை ஆற்றில் இருந்து மீட்டனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.