Rock Fort Times
Online News

திருச்சியில் பள்ளி மாணவனை அடித்த ஆசிரியர் மீது வழக்கு …

திருச்சி கே.கே.நகர் பகுதியை சேர்ந்த ஒரு மாணவன் அந்த பகுதியில் உள்ள மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். சமீபத்தில், நடந்த காலாண்டு தேர்வில் இந்த மாணவன் குறைவான மதிப்பெண் பெற்றதாக தெரிகிறது. இதனால் சம்பவத்தன்று சமூக அறிவியல் ஆசிரியர், மாணவனை பிரம்பால் அடித்து திட்டியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அந்த மாணவனுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதுகுறித்து மாணவனிடம் பெற்றோர் விசாரித்த போது மேற்கண்ட விவரம் தெரிய வந்தது. இந்த சம்பவம் குறித்து மாணவனின் தந்தை கே.கே நகர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் மாணவனை அடித்த ஆசிரியர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆசிரியர் ஒருவர் மாணவரை பிரம்பால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்