Rock Fort Times
Online News

திருச்சி வாழவந்தான் கோட்டை பகுதியில் 28-ந் தேதி மின் தடை…

திருச்சி மாவட்டம் துவாக்குடியை அடுத்த வாழவந்தான் கோட்டை துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் (28-11-2023) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதன் காரணமாக ஜெய்நகர், திருவேங்கட நகர், கணேசபுரம், கணபதி நகர், கீழகுமரேசபுரம், மேலகுமரேசபுரம், கூத்தைப்பார், கிருஷ்ணசமுத்திரம், பத்தாளபேட்டை, கிளியூர், தமிழ் நகர், பெல் டவுன்ஷிப்பில் சி மற்றும் டி செக்டார்களில் ஒரு பகுதி, சொக்கலிங்கபுரம், இம்மானுவேல் நகர், வ.உ.சி நகர், எழில் நகர், அய்யம்பட்டி, வாழவந்தான் கோட்டை, சிட்கோ தொழிற்பேட்டை, திருநெடுங்குளம், தொண்டைமான்பட்டி, பெரியார் நகர், ரெட்டியார் தோட்டம், ஈச்சங்காடு, பர்மா நகர், மாங்காவனம் ஆகிய பகுதிகளில் காலை 9-45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று திருச்சி மன்னார்புரம் கிழக்கு இயக்குதலும், காத்தலும், செய்பொறியாளர் முத்துராமன் தெரிவித்துள்ளார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்