திருச்சி ஸ்ரீரங்கம் கணபதி நகரை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் ( வயது 52). இவரது மனைவி மீனாட்சி(49). இவர்கள் இருவரும் இன்று ஸ்ரீரங்கம் மாம்பழச்சாலை சிக்னலில் இருந்து இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு போக்குவரத்து போலீசார் நின்று கொண்டு ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களை நிறுத்தி அபராதம் விதித்துக்கொண்டு இருந்தனர். அப்போது பல பேர் ஹெல்மெட் அணியாமல் வந்ததால் சாலையில் அதிகளவு வாகனங்கள் நின்றன. அந்த வாகனங்களை தமிழ்ச்செல்வன் கடந்த செல்ல முயன்றபோது எதிரே வந்த அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் பின்னால் அமர்ந்திருந்த மீனாட்சி சாலையில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தமிழ்ச்செல்வன் ஹெல்மெட் அணிந்திருந்ததால் உயிர் தப்பினார். உடனே போலீசார், மீனாட்சி என் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் . கணவர் கண் முன்னே மனைவி இறந்த சம்பவம் காண்போரை கண் கலங்க செய்தது. போலீசார் ஹெல்மெட் சோதனை நடத்தியதால் இந்த இடத்தில் அதிக வாகனங்கள் நிறுத்தப்பட்டதே இந்த விபத்துக்கு காரணம் என்று அங்கிருந்தவர்கள் குற்றம் சாட்டினர். இந்த விபத்து குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச்செயலாளர் வழக்கறிஞர் எம்.சரவணன் கூறுகையில்,
ஸ்ரீரங்கம் மாம்பழச்சாலை சிக்னலில் இதுபோல் அடிக்கடி விபத்து ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. விபத்துக்களை தடுக்க மாம்பழசாலை சிக்னல் முதல் காவேரி பாலம் வரை சாலையில் தடுப்பு அமைக்க வேண்டும் என்றார்.


Comments are closed, but trackbacks and pingbacks are open.