சமயபுரம் மாரியம்மன் கோவில் தமிழகத்தில் உள்ள அம்மன் கோவில்களில் பிரசித்தி பெற்ற தலமாகும். இந்த கோவிலுக்கு திருச்சி மாவட்டத்தில் இருந்து மட்டுமல்லாமல் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வந்து அம்மனை தரிசனம் செய்து செல்வார்கள். இந்த உண்டியல்கள் மாதமிருமுறை எண்ணப்படுகின்றன. கோயில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டன. இதில் காணிக்கையாக 84 லட்சத்து 78 ஆயிரத்து 310 ரூபாய் பணம் , 2 கிலோ 133 கிராம் தங்க நகைகள், 4 கிலோ 875 கிராம் வெள்ளி நகைகள், 197 வெளிநாட்டு கரன்சிகள் 744 வெளிநாட்டு நாணயங்கள் கிடைத்தாக கோவில் நிா்வாகம் தொிவித்துள்ளது. உண்டியல் எண்ணும் பணியில் திருக்கோவில் பணியாளர்கள், தன்னார்வ தொண்டர்கள் ஈடுபட்டனா்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.