Rock Fort Times
Online News

பிறந்தநாளில் சோக சம்பவம் : ரயிலில் பாய்ந்து கணவர் பலி வீட்டில் மனைவி, மகள் தற்கொலை…

மதுரை, நரிமேடு, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் வீதியைச் சேர்ந்தவர் காளிமுத்து( வயது 42). கார்பெண்டர். இவரது மனைவி ஜாக்குலின் ராணி(36). மகள் மதுமிதா(12). இந்நிலையில் நேற்று ( 07.11.2023 ) ஜாக்குலின் ராணியின் பிறந்தநாள் என்பதால் கேக் வெட்டி குடும்பத்துடன் வீட்டில் கொண்டாடியுள்ளனர். பின், கூடல்நகர் ரயில் நிலையத்துக்கு சென்ற காளிமுத்து, ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாா். அவரது உடலை ரயில்வே போலீசாா் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனா். இந்தநிலையில் மதியம் 2 மணியளவில் காளிமுத்துவுக்கு அவரது உறவினர் செல்போனில் அழைத்துள்ளார். நீண்ட நேரம் போன் செய்தும் காளிமுத்துவை தொடா்பு கொள்ள முடியவில்லை. இந்நிலையில் காளிமுத்துவின் வீட்டிற்கு அருகில் வசிப்பவர்கள், அவரது வீட்டுக் கதவை தட்டியபோது கதவு திறக்கப்படாமல், உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. ஜன்னல் வழியாக பார்த்தபோது அவரது மனைவி ஜாக்குலின் ராணி, மகள் மதுமிதா தூக்கில் பிணமாக தொங்கினா். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனா். அதன்போாில் செல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இரண்டு போ்களின் உடல்களை மீட்டு பிரேத பாிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். காளிமுத்து இறக்கும் முன், அவரது செல்போனில் மனைவியுடன் பிறந்தநாள் கொண்டாடியது குறித்தும், தற்கொலை செய்யும் முன் விடைபெறுகிறேன் எனக்கூறியும் வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் வைத்துள்ளது தொியவந்தது. அவா்கள் தற்கொலைக்கு காரணம் என்ன என்பது குறித்து செல்லுாா் போலீசாா் விசாரணை நடத்தி வருகின்றனா். ஒரே குடும்பத்தில் மூன்று போ் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினா்கள் மற்றும் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்