Rock Fort Times
Online News

அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் திருச்சி மாவட்ட யூனியன் சரகம் இரண்டின் சார்பில் தீபாவளி பாிசு….

அகில பாரத ஐயப்ப சேவா சங்கம், திருச்சி மாவட்ட யூனியன் சரகம் இரண்டின் சார்பாக தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சரகத்தில் உள்ள 25 கிளைகள் மூலமாக கிளைக்கு 10 பேர் தேர்வு செய்து தீபாவளி பண்டிகை முன்னிட்டு புத்தாடை, இனிப்பு வழங்கப்பட்டது.இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக மதுரை உயர்நீதிமன்ற கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர் ஆா். பாஸ்கரன் கலந்து கொண்டு  புத்தாடைகள், இனிப்பு  வழங்கினாா்   . இந்த விழாவில் திருச்சி மாவட்ட புரவலர் என்.வி.முரளி , தனசேகரன் குருசாமி , திருச்சி மாவட்ட கௌரவத் தலைவர் சபரிதாசன் குருசாமி முன்னிலை வகித்தனர்.  மாவட்டத் துணைத் தலைவர் முத்து தலைமையில் விழா தொடங்கப்பட்டு , மாவட்ட அலுவலக செயலாளர் அம்சாரம் வரவேற்புரை வழங்கினாா். மாவட்ட பொருளாளர் சுரேஷ் நிகழ்சியை தொகுத்து வழங்கினார். சரகம் இரண்டு பொறுப்பாளர் சிதம்பரம் நன்றி   கூறினாா். விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் திருச்சி மாவட்ட யூனியன் சரகம் இரண்டை சேர்ந்த நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்