Rock Fort Times
Online News

திருச்சி விமான நிலையத்தில் ரூ.97 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்.

திருச்சி விமான நிலையத்தில் சிங்கப்பூரில் இருந்து வந்த ஸ்கூட் விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த போது ஆண் பயணி ஒருவர் தனது மினி கம்யூட்டரில் மறைத்து வைத்து எடுத்து வந்த ரூ.27 லட்சத்து 42 ஆயிரத்து 688 மதிப்புள்ள 494 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் அந்த பயணியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அதே போல் விமான நிலைய கழிவறையில் கேட்பாரற்று கிடந்த 3 தங்க சங்கிலி, ஒரு தங்க கட்டி என ரூ.70 லட்சத்து 28 ஆயிரத்து 832 மதிப்புள்ள 1 கிலோ 266 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று ஒரே நாளில் திருச்சி விமான நிலையத்தில் ரூ.97 லட்சத்து 71 ஆயிரத்து 520 மதிப்புள்ள 1 கிலோ 760 கிராம் தங்கம் பிடிபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

1 Comment
  1. mitolyn reviews says

    **mitolyn reviews**

    Mitolyn is a carefully developed, plant-based formula created to help support metabolic efficiency and encourage healthy, lasting weight management.

Leave A Reply

Your email address will not be published.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்