Rock Fort Times
Online News

திருச்சி மாவட்டத்தில் ரவுடிகளின் வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை- அரிவாள், கத்தி பறிமுதல்…

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வருண்குமாா் நடவடிக்கை...

திருச்சி மாவட்டத்தில் ரவுடிகளின் வீடுகள் மற்றும் அவர்களது கூட்டாளிகளின் இருப்பிடங்களை சோதனை செய்ய உயர் அதிகாரிகளின் உத்தரவுபடியும், திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.வீ.வருண்குமாா் ஐபிஎஸ் அறிவுறுத்தலின் பேரிலும், தனிப்படை அமைக்கப்பட்டு திருச்சி மாவட்டத்தில் உள்ள 166 ரவுடிகளின் வீடுகள் மற்றும் 3 ரவுடிகள் கூட்டாளிகளின் வீடுகளில் சோதனை செய்யப்பட்டது. இச்சோதனையில் சரித்திர பதிவேடு ரவுடியான குழுமணி வீரபுத்திரன் மகன் விக்னேஷ் என்பவர் மீது ஜீயபுரம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதேபோல், பெருகமணி ராஜகோபால் மகன் தீனதயாளன் (எ) தினா என்பவரது கூட்டாளியான எஸ்.புதுக்கோட்டை மேற்கு தெரு அல்லிமுத்து மகன் மணிகண்டன் (எ) மன்னாரு என்பவரிடமிருந்து அரிவாள் மற்றும் கத்தி போன்ற ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டது.
இவா்கள் மீது காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர். மேலும், திருச்சி மாவட்டத்தில் உள்ள 349 சரித்திர பதிவேடு
ரவுடிகளில் தற்போது வரை 32 ரவுடிகள் கைது செய்யப்பட்டும், 11 ரவுடிகள் மீது குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டும் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளனர். 152 ரவுடிகளிடமிருந்து நன்னடத்தை பிணைய பத்திரம் பெறப்பட்டும், 60 ரவுடிகளுக்கு நன்னடத்தை பிணைய பத்திரம் பெற வருவாய் கோட்டாட்சியாிடம் வேண்டுகோள் கடிதம் கொடுக்கபட்டும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மீதமுள்ள ரவடிகளின் நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் ஏதேனும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவது தெரிய வந்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்