Rock Fort Times
Online News

கால்நடைகளை சாலையில் திரிய விட்டால் அபராதம்…

திருச்சி மாநகராட்சி மேயா் மு. அன்பழகன் அறிவிப்பு..

திருச்சி மாநகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து சாலைகளிலும் போக்குவரத்துக்கு இடையூறாக ஆடுகள் , மாடுகள், குதிரைகள் உள்ளிட்ட கால் நடைகள் பொதுமக்களை  அச்சுறுத்தும் வகையில் சுற்றி திரிகின்றன. இதனால் , பல்வேறு சாலைகளில் தினமும் விபத்துகள் ஏற்படுகிறது . இந்நிலையில் , சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகள் பிடிக்கப்பட்டு கோணக்கரை பட்டியில் அடைத்து பாதுகாத்து பராமரிக்கப்பட்டு வருகிறது . இங்கு பராமரிக்கப்படும் கால்நடைகளை , அதன் உரிமையாளர்கள் 7 நாட்களுக்குள் உரிய அபராதம் செலுத்தி மீட்க வேண்டும், இல்லையேல் அவை பொது ஏலம் விடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது . அதன்படி , மாநகராட்சியால் பிடிக்கப்பட்டு , உரிமையாளர்களால் மீட்கப்படாத கால்நடைகள் 19.11.2022 முதல் 30.10.2023 வரை 248 கால்நடைகள் பொது ஏலம் மற்றும் அபராதத் தொகையாக ரூ.8,18,500 வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி பகுதிகளில் கால்நடைகளை சாலைகளில் திாிய விட்டால் மாநகராட்சி மூலம் பிடிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என திருச்சி மாநகராட்சி மேயர் மு.அன்பழகன் தெரிவித்துள்ளாா்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்