திருச்சியை தலைமை இடமாகக் கொண்டு 10க்கும் மேற்பட்ட நகரங்களில் கிளைகளை உருவாக்கி பொதுமக்களிடம் ரூ.100 கோடிக்கு மேல் மோசடி செய்த எல்பின், ஆருத்ரா, நியோமேக்ஸ், பிரணவ் ஜுவல்லரி போன்ற நிதி நிறுவனங்களை காவல்துறை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும், பொதுமக்களிடமிருந்து மேற்கண்ட நிறுவனங்கள் வசூலித்த தொகையை போலீசார் மீட்டு வாடிக்கையாளர்களிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும், பொதுமக்கள் முதலீட்டை பாதுகாக்க சட்டம் இயற்ற வேண்டும், மோசடிக்கு உடந்தையாக செயல்படுவோரை கண்டறிந்து கைது செய்ய வேண்டும் என் பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரேணுகா தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி மாநிலக்குழு உறுப்பினர் ஸ்ரீதர், மாநகர் மாவட்ட செயலாளர் ராஜா, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கார்த்திகேயன், லெனின், ரெங்கராஜன் ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் பகுதி செயலாளர்கள் சுரேஷ், ரபீக், விஜயேந்திரன் உட்பட பிரணவ் ஜூவல்லரியால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.