Rock Fort Times
Online News

சிறிய அளவிலான அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு மின் கட்டணம் குறைப்பு….

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு..

சென்னை மாநகரம் மற்றும் பிற மாநகராட்சியையொட்டி உள்ள புறநகர் பகுதிகளில் அதிக எண்ணிக்கையில் சிறு அடுக்குமாடி குடியிருப்புகள் (சிறிய அடுக்குமாடி வீடுகள்) உள்ளன. அண்மையில், தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையம், மின் கட்டண முறையை மாற்றியமைத்த போது இந்த குடியிருப்புகளின் பொது விளக்கு வசதிகள், நீர் இறைக்கும் மோட்டார்கள் போன்ற பொது பயன்பாட்டு பணிகளுக்கான மின் கட்டணங்கள் உள்ளாட்சி அமைப்புகளுக்கான கட்டண முறைக்கு மாற்றப்பட்டுள்ளன. இதனால் பொது மக்களுக்கான மின்சாரத்துக்கு ஒரு யூனிட்டுக்கு 8 ரூபாய்க்கு மேல் செலுத்த வேண்டி உள்ளது. இக்குடியிருப்புகளில் வசிக்க கூடிய நடுத்தர மக்களை இது பெரிதும் பாதிப்பதாக உள்ளது என பல்வேறு குடியிருப்பு நல சங்கங்கள் தெரிவித்ததன் அடிப்படையில் இதனை பரிசீலித்து 10 வீடுகள் அல்லது அதற்கு குறைவாக 3 மாடிகள் அல்லது அதற்கு குறைவாகவும் இருக்க கூடிய மின் தூக்கி (லிப்ட்) இல்லாத அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு பொது பயன்பாட்டுக்கான புதிய சலுகை கட்டண முறை நடைமுறைப்படுத்தப்படும். இதன் கீழ் பொது பயன்பாட்டுக்கு செலுத்தப்பட வேண்டிய கட்டணம் 1 யூனிட்டுக்கு 8 ரூபாயில் இருந்து 5 ரூபாய் 50 பைசாவாக குறையும். இதனால் மாநிலம் முழுவதும் உள்ள சிறு குடியிருப்புகளில் வசிக்கும் நடுத்தர மக்கள் பயன் அடைவார்கள் என்று  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்