சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தனது 50வது பிறந்தநாளை முன்னிட்டு (நவம்பர் 27) சென்னை மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதல்- அமைச்சர்கள் பேரறிஞர் அண்ணா, மு.கருணாநிதி ஆகியோர் நினைவிடங்களில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் தனது தந்தையும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், தாய் துர்கா ஸ்டாலின் ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றார். அதைத் தொடர்ந்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். இன்று பிறந்தநாள் காணும் உதயநிதி ஸ்டாலினுக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் பலரும் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இலட்சியப் பாதையில் முன்னேறு
உதயநிதி ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ள ஸ்டாலின்,
“சிந்தனைகளால் வளம் பெற்ற தமிழ்ச் சமூகத்தின் எதிர்காலம் காட்சிப் பிழைகளால் தடம் மாறிடாமல் காக்க வேண்டிய பெரும் பொறுப்பைக் காலம் நம்மிடம் வழங்கியுள்ளது. கழகத்தின் ரத்த நாளமாக நான் வளர்த்த இளைஞரணியின் கொள்கைப் பணியில் இனித் தேவை வேகமல்ல, பெரும் பாய்ச்சல். உழைப்பால் உயர்ந்திடு! இலட்சியப் பாதையில் முன்னேறு!கொள்கையின் வெற்றியில் உன் வாழ்வின் வெற்றியைக் கண்டிடு!” என்று வாழ்த்தி உள்ளார்.


Comments are closed.