மராட்டிய மாநிலத்தில் புதிய ஆஷ்தி பகுதியிலிருந்து அகமத்நகர் செல்லும் சிறப்பு ரெயிலில் திடீரென தீ பற்றி எரிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. புறநகர் ரயில் சென்று கொண்டிருக்கும்போதே ஒரு பெட்டியில் ஏற்பட்ட தீ அடுத்தடுத்து 4 பெட்டிகளுக்கும் பரவியது. 5 பெட்டிகளில் தீப்பற்றிய நிலையில், பயணிகள் உடனடியாக கீழே இறங்கியதால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தீ விபத்துக்கான காரணம் குறித்து ரெயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.