புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர், கோட்டை தெருவை சேர்ந்தவர் முத்தன். இவரது மகன் ராஜா (வயது 39 ).வெங்காய வியாபாரி . இவர் சென்னை பைபாஸ் சாலையில் நின்று கொண்டிருந்தபோது காரில் வந்த மர்ம நபர் இவரிடம் அரிவாள் முனையில் பணத்தை பறித்து சென்றுள்ளாா் . இது குறித்த புகாரின் பேரில் காந்தி மார்க்கெட் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிந்து வாலிபரை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவா் கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலைச் சேர்ந்த பிரவீன் என்கிற அருண்பால்(வயது 37) என்பது தெரியவந்தது. அவரிடம் இருந்து அரிவாள், பணம் மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.