Rock Fort Times
Online News

திருச்சி பஞ்சப்பூர் பஸ் நிலைய கட்டுமான பணிகளை மேயர் ஆய்வு…

திருச்சி பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் கட்டும் பணி மற்றும் கனரக சரக்கு வாகன முனையம் கட்டுமானப் பணி, சாலைகள், மழைநீர் வடிகால் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் என மொத்தம் ரூ.349.98 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. இங்கு பேருந்து நிறுத்த தடங்களின் மொத்த எண்ணிக்கை 404. நகரப்பேருந்து நிறுத்த தடங்களின் எண்ணிக்கை 60. கட்டப்படவுள்ள கடைகளின் எண்ணிக்கை 70. நான்கு சக்கர வாகன நிறுத்தங்களின் எண்ணிக்கை 556. இரண்டு சக்கர வாகன நிறுத்தங்களின் எண்ணிக்கை 1125. ஆட்டோ நிறுத்தங்களின் எண்ணிக்கை 350. நகரும் படிகட்டுகள் ஆகிய வசதிகளுடன் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்கான கட்டுமான பணிகளை திருச்சி மாநகராட்சி மேயர் மு. அன்பழகன் இன்று ( 12.10.2023 ) பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது செயற்பொறியாளர் கே.எஸ். பாலசுப்பிரமணியன், உதவி பொறியாளர் வேல்முருகன், மண்டலத் தலைவர் துர்காதேவி , மாமன்ற உறுப்பினர் சுபா மற்றும் ஒப்பந்ததாரர்கள உடன் இருந்தனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்