Rock Fort Times
Online News

திருச்சி ரயில் நிலையத்தில் 4 கிலோ கஞ்சா பறிமுதல்…

வடமாநில வாலிபர் கைது..

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் 1-வது நடைமேடையில் சந்தேகத்திக்கிடமான வகையில் பையுடன் நின்றிருந்த வடமாநில வாலிபரை பிடித்து ரெயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அவர் வைத்திருந்த பையில் சோதனை மேற்கொண்டபோது அதில் 4 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. விசாரணையில், அவர் வடமாநிலத்தை சேர்ந்த பிரமோத்நாயக் ( வயது 26) என்பதும், கஞ்சாவை வட மாநிலங்களிலிருந்து ஹவுரா விரைவு ரயிலில் கடத்தி வந்து தமிழகத்தில் விநியோகிப்பதும், தற்போது சென்னைக்கு செல்லவிருந்ததும் தெரிய வந்தது. இதனையடுத்து அவரை ரயில்வே போலீசார் மத்திய போதைப் பொருள் தடுப்பு புலனாய்வுப் பிரிவினரிடம் (என்ஐபி) ஒப்படைத்தன்பேரில், அவரை கைது செய்துள்ளனர். இதேபோல, 8 ஆம் தேதியும் வடமாநிலத்தைச் சேர்ந்த ரமேஷ் சந்திரநாயக் என்பவரை போதைப்பொருள் தடுப்பு புலனாய்வு போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்