Rock Fort Times
Online News

உண்மையான எதிா்கட்சி அதிமுக என்பதை எடப்பாடி நிரூபித்துள்ளாா் – கேபி.முனுசாமி.

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே பெரியகோட்டப்பள்ளியில் அ.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி செய்தியாளர்களை சந்தித்தாா். அப்போது அவா், அண்ணாமலையின் நண்பர் அமர் பிரசாத் ரெட்டி, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமியால் தான் தோற்றது என்று குற்றம் சாட்டியுள்ளார். அது ஏற்புடையது அல்ல. தவறான கருத்து.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கட்சி நன்றாக இயங்கி கொண்டிருக்கிறது. இந்த தேர்தல் மூலம் தமிழகத்தின் உண்மையான எதிர்க்கட்சி அ.தி.மு.க. என்பதை எடப்பாடி பழனிசாமி நிரூபித்திருக்கிறார். தி.மு.க. அரசு நீட் தேர்வை ரத்து செய்கிறேன் என்று சொல்லி மாணவர்களை ஒரு பக்கம் ஏமாற்றி கொண்டிருக்கிறது. நீட் தேர்வுக்காக அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு சிறப்பு ஆசிரியர்களை நியமித்து பயிற்சி அளிக்க வேண்டும். அப்படி பயிற்சி அளித்தால் தனியார் பள்ளிகளுக்கு போட்டியாக அரசுப் பள்ளி மாணவர்களும் வருவார்கள் என கூறினாா். மேலும் இந்த சந்திப்பின்போது கிருஷ்ணகிரி அதிமுக எம்எல்ஏ அசோக்குமார், ஒன்றிய செயலாளர்கள் கண்ணியப்பன், சோக்காடி ராஜன், மாவட்ட கவுன்சிலர் ஜெயா ஆஜி உள்ளிட்ட பலர் உடனிருந்தனா்.

 

1 Comment
  1. mitolyn official says

    **mitolyn official**

    Mitolyn is a carefully developed, plant-based formula created to help support metabolic efficiency and encourage healthy, lasting weight management.

Leave A Reply

Your email address will not be published.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்