Rock Fort Times
Online News

கூட்டணி குறித்து யாரும் பேசக்கூடாது அதிமுக தலைமை “அட்வைஸ்”….

தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றிருந்த பாஜக கடந்த சட்டமன்றத் தேர்தலில் 20 தொகுதிகளில் போட்டியிட்டது. ஆனால், நான்கு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. தற்போது நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அக்கட்சிகளுக்கு இடையே கருத்து மோதல்கள் நிலவி வருகின்றன. பாஜக தமிழக தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றதில் இருந்து அவருக்கு அதிமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது ஒரு புறம் இருக்க பேரறிஞர் அண்ணா, ஜெயலலிதா, பெரியார் குறித்து சில கருத்துக்களை அண்ணாமலை தெரிவித்து இருந்தார். இதற்கு அதிமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இவ்வாறான சூழ்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பாஜகவுடன் அதிமுக , இனி கூட்டணி வைக்காது என்று தெரிவித்தார். அதிமுக கூட்டணி தங்களுக்கு தேவையில்லை என்று பாஜகவினரும், பாஜகவுடன் கூட்டணி தேவையில்லை என்று அதிமுகவினரும் போட்டி போட்டு போஸ்டர் அடித்து ஒட்டி வருகின்றனர்.
மேலும், கொங்கு மண்டலத்தில் நான்தான் பெரிய ஆள் என்று நினைத்து கொண்டு எடப்பாடி பழனிச்சாமி மற்றும் மாஜி அமைச்சர்களை தரக்குறைவாக பேசி மோதல் போக்கை அண்ணாமலை கடைபிடித்து வருகிறார். இதை அதிமுக தலைவர்களாலும், தொண்டர்களாலும் சகித்து கொள்ள முடியவில்லை. இதனால், பாஜகவினரை அதிமுக தலைவர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்தநிலையில், அதிமுக நிர்வாகிகளுக்கு அதிமுக தலைமை ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில், பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கட்சி நிர்வாகிகளின் விமர்சனங்கள் குழப்பத்தை ஏற்படுத்தும். கூட்டணி நிலைப்பாட்டை தலைமை ஏற்கனவே கூறிவிட்ட நிலையில் கூட்டணி தொடர்பாக யாரும் பொதுவெளியில் கருத்து கூற வேண்டாம். போஸ்டர் ஓட்டுவது, சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும்,” என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்