பெட்ரோல், டீசல், அத்தியாவசிய பொருட்களின் விலை ஆகியவற்றை குறைக்க வேண்டும். இந்தியை திணித்து தமிழுக்கு எதிராக செயல்படுவதை கைவிட வேண்டும். வேலையில்லா திண்டாட்டத்தை போக்க வேண்டும். சாதி, மத கலவரங்களை தூண்டி, மக்கள் ஒருமைப்பாட்டை குலைக்கும் பாஜக அரசு ஆட்சியை விட்டு வெளியேற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ( 13.09.2023 ) தமிழகம் முழுவதும் இரண்டாவது நாளாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருச்சி ஸ்ரீரங்கம் ரெயில் நிலையத்தில் சி.ஐ.டி.யூ. மாவட்ட பொதுச் செயலாளரும், கவுன்சிலருமான சுரேஷ் தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. மறியல் போராட்டத்தில் பொதுச் செயலாளர் பார்வதி, மாவட்ட பொருளாளர் சண்முகம், தேசிய கட்டுப்பாட்டு குழு செல்வராஜ், மாணவர் மாவட்ட செயலாளர் எஸ் சிவா, பகுதி செயலாளர்கள் சுரேஷ், முத்துசாமி, அஞ்சுகம், செம்பட்டு ராஜா, அபுதாகிர் மாதர் சந்திரன மாநகர தலைவர் ஆயிஷா, மாணவர் பெருமன்ற செயலாளர்கள் மற்றும் 100 -க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கைதாகினர். அப்போது போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.


Comments are closed, but trackbacks and pingbacks are open.