Rock Fort Times
Online News

புதுக்கோட்டை: மணல்குவாரி அதிபர் வீட்டில் 2வது நாளாக அமலாக்கத்துறையினர் சோதனை…

சென்னை, திருச்சி, புதுக்கோட்டை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள மணல் குவாரிகளில் நேற்று அமலாக்கத் துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர். திருச்சி கொள்ளிடம் ஆற்றில் உள்ள மணல் குவாரிகள், புதுக்கோட்டையில் உள்ள மணல் குவாரி அதிபர் ராமச்சந்திரன் மற்றும் அவரது உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் அமலாக்கத் துறையினர் விடிய விடிய சோதனை மேற்கொண்டனர். இன்று ( 13.09.2023 ) இரண்டாவது நாளாக ராமச்சந்திரன் வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், கறம்பக்குடி அருகே கொழுந்தீராம் பட்டு பகுதியில் உள்ள மணல் குவாரி உரிமையாளர் கரிகாலன் என்பவரது வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கரிகாலன், தி.மு.க மூத்த அமைச்சர் ஒருவருக்கு நெருக்கமானவர் மற்றும் மணல் குவாரி அதிபர் ராமச்சந்திரனின் கூட்டாளி என்று கூறப்படுகிறது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்